Wednesday, October 11, 2023

தேர்ந்தெடுத்த சிறுகதைகள் - பிரபஞ்சன்(1945-2018)

தேர்ந்தெடுத்த சிறுகதைகள்

நாம் மறந்த மற்றும் இக்கால சூழ்நிலைகளில் யோசிக்க தவறிய பல சிறிய விஷயங்களை தன் கதையின் மூலம் பிரபஞ்சன் எடுத்து விளக்கி இருக்கிறார்.

இவரது அனைத்து கதைகளும் மானுடம் பற்றியும் மனிதநேயத்தை பற்றியும் மிக அழகாக பேசும்.மிக சிறிய கதைகள் ஆனால் , அவை ஏற்படுத்தும் தாக்கம் மிகவும் ஆழமானது .

அவர் அவரது கதைகளில் உபயோகப்படுத்தும் கதாபாத்திரத்திரங்கள், நாம் நம் அன்றாட வாழ்வில் காண்பவையே. ஆனால், வாழ்வியல் காரணங்களாலும் பொருள் ஈட்டும் எண்ணங்களாலும் மேலும் பல சக்கரங்களை நாமே நமக்கு கட்டிக் கொண்ட காரணங்களாலும் நம்மால் அவர்களை காண முடியவில்லை.

ஒரு மாலை தென்றல் நம்மை சீண்டுவது போல, மண்ணில் விழுந்த மழைத்துளியால் கிளம்பும் மண்வாசனை போல, இரவு நேரத்தில் கடல் அலை ஓசை போல, இவரது கதைகள் அனைத்தும் மிகவும் ஆறுதல் தருவதாக அமைந்திருக்கிறது.

"பிரம்மம்" என்கிற இவரது கதை மூலம் நிச்சயம் ஒரு மரமாவது நாம் வளர்க்க வேண்டும் என்ற ஆசையை உங்கள் மனதில் தோன்ற வைப்பார். "யாசுமின் அக்கா" என்கிற கதை மூலம் பர்தா அணிந்த பாய் அக்காவை பார்த்தாலே உங்கள் மனதில் தானாக மரியாதை வரும் வகையில் அமைத்திருப்பார். சமுதாயத்தில் இருந்த மற்றும் இருக்கும் நிற வேறுபாட்டை மற்றும் வெறியை இவரின்"பாதுகை"யை விட யாராலும் மிக எளிமையாக, ஆழமாக சொல்லிவிட முடியாது.

இவரது கதைகளில் சில கதைகள் பல்வேறு கல்லூரிகளில் பாடமாக வைக்கப்பட்டுள்ளது. பிரபஞ்சனின் கதைகளை நோக்கி நமது வாசிப்பை தொடர்வதன் மூலம்  நாம் மனிதநேயத்தில் பல படிகள் முன்னேறலாம். 


வாருங்கள்,முன்னேறுவோம்..... மனிதத்தில்!!!!!


No comments:

Post a Comment

Book Commentary|| Pride and Prejudice - Jane Austen

It is a truth universally acknowledged that some stories never fade with time. Pride and Prejudice by Jane Austen is one such masterpiece, ...