இந்த புத்தகம் எஸ்.ராமகிருஷ்ணன் அவர்களின் “Travel vlog” என்றே கூறலாம். இதில் மொத்தம் 41 கட்டுரைகள் உள்ளது. காஷ்மீர் முதல் குமரி வரை பயணித்து பெற்ற அனுபவத்தை வாசிப்பாளர்களிடம் பகிர்ந்துகொள்கிறார்.
மனிதர்கள் இயற்கையாகவே பயணிகள் என்றும் பயணம்தான் மனித இனத்தை நாகரிக வளர்ச்சியை நோக்கி கொண்டு சென்றது என்றும் கூறுகிறார்.அவரது ஒவ்வொரு கட்டுரையை படித்த பிறகு நாமே அங்கு சென்று வந்தது போன்ற ஒரு உணர்ச்சி ஏற்படும். ஜெய்சால்மாரில் உள்ள பாலைவனத்தின் விவரிப்பின் போது, ஒரு வறண்ட, வண்ணமில்லாத பாலையை இப்படி கூட ரசிக்க முடியுமா!! என்று தோன்ற வைக்கிறார். இவை இடம்பெறும் கட்டுரையின் பெயர்: “மணலின் சமுத்திரம்”.
1964 தனுஷ்கோடியில் ஏற்பட்ட புயலில் தாக்கத்தை, அவர் “உறங்கும் கடல்” கட்டுரையின் மூலம் வெளிப்படுத்தும் போதும் நாகபட்டினம் கடற்கரை, திருநெல்வேலி மாவட்டம் கொற்கை கடற்கரையில் நடந்த சுனாமியின் கோரத் தாண்டவம் பற்றியும் அவர் பகிரும் போது மனது கனக்கிறது.
கங்கைகொண்ட சோழபுரத்தின் கோயிலை நேரில் கண்டது போல தோன்ற வைக்கும் அவரது எழுத்துக்களும், விவரனையும் இடம்பெறும் கட்டுரை: கல்லில் மலர்ந்த பூக்கள்.
இதுபோன்ற அவரது பயணம் சாரநாத், பூனா, பனாரஸ் என்று நீண்டுகொண்டே போகிறது. ஒவ்வொரு இடத்தையும் எவ்வாறு ரசிக்க வேண்டும் என்று அவரது அனுபவம் கற்றுக் கொடுக்கிறது.
பணம் இருந்தால் யார் வேண்டுமானாலும் இந்த இடங்களுக்கு செல்லலாம். ஆனால் ரசிக்கும் மனம் இருந்தால் மட்டும்தான் பயணம் ஒரு பெரிய அனுபவம் ஆகின்றது.
ஒரு இடம் வெறும் தண்ணீராலோ, செங்கல் மணலிலாலோஆனவை அல்ல. அவை பல ஆயிரம் வருஷம் வரலாற்றை சுமந்துக் கொண்டு இருக்கிறது. இன்றைக்கு நாம் செல்லும் ஒரு பழமை வாய்ந்த கோவிலில் நாம் இன்று கடவுளை தரிசிக்கும் அதே இடத்தில் பல ஆயிரம் வருடம் முன்பு ஒரு அரசன் நின்று தரிசித்து இருப்பான் என்று உங்களால் நினைத்துப் பார்க்க முடிந்தால் அது அனுபவம் ஆகிறது.
Big Bang - இன் விளைவாக பிரபஞ்சமே பயணித்துக் கொண்டிருக்கும் போது, நாம் அதில் ஒரு புள்ளியின் புள்ளி. நாமும் பயணிப்போம் உலகை உணர, வரலாற்றை உணர ,முன்னோர்களை உணர ,நம்மை உணர.
நன்றி,
Cheers.

No comments:
Post a Comment